காணொளி: பாகிஸ்தானில் இசை மற்றும் பாடல்களால் இணையும் பெண்கள்
காணொளி: பாகிஸ்தானில் இசை மற்றும் பாடல்களால் இணையும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
கராச்சியைச் சேர்ந்த பெண்கள் குழு ஒன்று, 'சிங் அலாங் கராச்சி' என்ற நிகழ்வின் வழியே, இசை மற்றும் பாடல்கள் மூலமாக இணைகிறார்கள். இந்த நிகழ்வு தங்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
"இப்போது நாங்கள் எங்கள் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டோம். இது எங்களுக்கான நேரம், அதனால் எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ ஆசைப்படுகிறோம். இங்கே நாங்கள் எல்லாரும் சேர்ந்து சத்தமாகப் பாடுவோம், நாங்கள் எல்லாரும் பாத்ரூம் சிங்கர்கள் தான், எல்லோருடனும் சேர்ந்து இருக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று ஒதுங்கி இருக்க இங்கே வருகிறார்கள்" என்கிறார் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த சஹர் உசேன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



