காணொளி: சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய எ.வ.வேலு பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, சென்னை வந்த எ.வ.வேலு பேசியது என்ன?
காணொளி: சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய எ.வ.வேலு பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தன் மீதான வழக்கு பற்றியும் தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் பற்றியும் பேசினார்.

எ.வ. வேலு அமைச்சராக இருந்தபோது சாலை பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அதில் எ.வ.வேலு ஆஜராவதற்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் எ.வ.வேலு, தான் சிங்கப்பூரில் சிகிச்சையில் இருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பெயர் குறிப்பிடாமல் இவரை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து இன்று சென்னை திரும்பிய எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்து வழக்கு மற்றும் சம்மன் தொடர்பாக விளக்கமளித்துப் பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு