காணொளி: அமெரிக்காவில் இரு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து
காணொளி: அமெரிக்காவில் இரு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து
பிரசுரிக்கப்பட்டது
இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்கு உள்ளானது.
அமெரிக்காவின் இடாஹோவில் கன்ஃபைட்டர் ஸ்கைஸ் விமானக் கண்காட்சியின் இறுதி நாளின்போது, அமெரிக்க கடற்படையின் 'EA-18G' ரக ஜெட் விமானங்கள் வான்வழி சாகசத்தில் ஈடுபட்டிருந்தன.
அப்போது இரு விமானங்கள் மோதிக்கொண்டன. அதன் உள்ளிருந்த அனைவரும் பாரசூட் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேறினர் என்று அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்து குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



