காணொளி: விவசாய நிலத்தில் வெள்ளை நிற நாகப்பாம்பு - வைரலாகும் வீடியோ
தெலங்கானாவின் நிர்மல் மாவட்டம் கானாபூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெள்ளை நிற நாகப்பாம்பு ஒன்று காணப்பட்டது.
விவசாய நிலத்தில் காணப்பட்ட அதிசய வெள்ளை நிற நாகப்பாம்பு
அந்த வழியாகச் சென்ற சில இளைஞர்கள் அந்த அதிசய பாம்பை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
நாகப்பாம்புகள் வெள்ளை நிறத்தில் இருப்பது மிகவும் அரியது என்றும், இது ஒரு சாதாரண நாகப்பாம்பே தவிர 'வெள்ளை நாகம்' என்று தனியாக எந்தவொரு பாம்பு வகையும் கிடையாது என்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் ராதாகிருஷ்ணா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சில உயிரினங்களில் ஏற்படும் மரபணு குறைபாடு காரணமாக, உடலுக்கு நிரத்துக்கு காரணமான 'மெலனின்' குறைபாடு ஏற்படுவதால் அவை வெள்ளை நிறத்தில் பிரப்பதாகவும், அறிவியல் ரீதியாக இது Albinism என அழைக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



