டெல்லியில் 'இந்தியா' கூட்டணி பேரணி - முக்கிய நிகழ்வுகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு

உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, டெல்லியில் உச்ச நீதிமன்றம் நோக்கிய எதிர்க்கட்சிகள் பேரணியில் ஒரு காட்சி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நோக்கிய எதிர்க்கட்சிகள் பேரணி நடக்கிறது. திட்டமிடப்பட்ட பாதையில் பேரணி சென்ற போது பாதி வழியில், அதாவது மண்டி ஹவுஸ் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்கள் இந்திய கேட் பகுதியை நோக்கிச் சென்றனர்.

போராட்டக்காரர்கள் பகவான் தாஸ் மார்க் வழியாக உச்ச நீதிமன்றத்தை அடைய முயன்றனர், ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை; அப்போது தள்ளுமுள்ளு சம்பவமும் ஏற்பட்டது.

பின்னர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி திலக் மார்க் வழியாக உச்ச நீதிமன்றத்தின் 'கேட் பி' நுழைவாயிலை ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அடைந்தனர்.

போராட்டக்களத்தில் என்ன நடந்தது? என்பதை கண் முன்னே காட்டும் ஒரு புகைப்படத் தொகுப்பை பார்க்கலாம்.

உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, இந்தியா கூட்டணி அழைப்பை ஏற்று டெல்லி பாரகம்பாவில் திரண்டிருந்த ஆதரவாளர்கள்
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, போராட்டக்களத்திற்கு பேருந்தில் செல்லும் போது, பேட்மேன் முகக்கவசத்தை அணிய காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ராகுல் காந்தி உதவுகிறார்
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, போராட்டக்களத்திற்கு பேருந்தில் செல்லும் அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போரா
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்ற பேருந்தை சுற்றிலும் திரண்டிருந்த ஆதரவாளர்கள்
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, எதிர்க்கட்சிகள் பேரணியில் திரளாக பங்கேற்ற ஆதரவாளர்கள்
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, எதிர்க்கட்சிகள் பேரணியில் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள்
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, பேரணியில் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சிவக்குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, உச்ச நீதிமன்றம் செல்லும் வழியிலேயே மண்டி ஹவுஸ் பகுதியில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி, தலைமைத் தேர்தல் ஆணையர், ராகுல் காந்தி
படக்குறிப்பு, காவல்துறை கெடுபிடிகளையும் தாண்டி அவ்வப்போது திட்டத்தை மாற்றி ஒரு வழியாக உச்ச நீதிமன்ற வாயிலை போராட்டக்காரர்கள் அடைந்த காட்சி

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு