காணொளி: பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து; 19 பேர் பலி

காணொளிக் குறிப்பு, பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து; 19 பேர் பலி
காணொளி: பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்து; 19 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

(எச்சரிக்கை: இந்த காணொளி சங்கடம் தரலாம்)

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

பிபிசி உருதுவின் தகவல்படி, இந்த விபத்து பெஷாவரின் திர் காலனி பகுதியில் நடந்துள்ளது.

விபத்துக்குப் பின் 18 குழந்தைகள் மற்றும் ஆசிரியை இறந்தநிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக லேடி ரீடிங் மருத்துவமனையின் நிர்வாகி முகமது ஆசிம் என்பவர் கூறுனார்.

விபத்தில் காயமடைந்த 40 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு