காணொளி: பஞ்சாபில் பிடிஎஸ் ஆர்மி சந்திக்கும் பிரச்னைகள்

காணொளிக் குறிப்பு, பஞ்சாபில் BTS ரசிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள்
காணொளி: பஞ்சாபில் பிடிஎஸ் ஆர்மி சந்திக்கும் பிரச்னைகள்
பிரசுரிக்கப்பட்டது

கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் (BTS) பஞ்சாப் மாநிலத்தின் கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ளது.

இந்த ரசிகர்கள் தங்களை பஞ்சாபி பிடிஎஸ் ஆர்மி என பெருமையாக கூறிக்கொள்கின்றனர். அதில் அப்படி என்ன இருக்கிறது?

பிடிஎஸ் பாடல்கள் இளைஞர்களின் போராட்டங்கள், மனநலன் மற்றும் கனவுகளை துரத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

பஞ்சாபை சேர்ந்த ரசிகர்கள் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் பிடிஎஸ் இசை நிகழ்ச்சி திரையிடல்களில் பங்கேற்கின்றனர்.

பஞ்சாபி பாடகர்கள் தில்ஜித் தோசாஞ்ச், குரு ரந்தாவா ஆகியோரும் கே-பாப் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை தயாரித்துள்ளனர்.

பஞ்சாபில் உள்ள பிடிஎஸ் ரசிகர்கள் தாங்கள் பிடிஎஸ் ரசிகர்களாக இருப்பதால் அலட்சியப்படுத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு