காணொளி: 'வெட்டப்பட்ட மரங்கள்' - இந்த பெண் கதறி அழுதது ஏன்?
10 ஆண்டுகளாக வளர்த்த நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் ஒரே நாளில் வெட்டி சாய்க்கப்பட்டதாக கூறுகிறார் இப்பெண்மணி.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வியும் அவரது மகனான பல் மருத்துவர் பாலமுருகனும் தங்கள் பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதை அமைக்க, செல்வியின் நிலம் வழியாக பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் செல்வி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி அவர்கள் நிலத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டன. மரங்களை கட்டிப்பிடித்துகண்ணீர் விட்டு செல்வி அழுத காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



