காணொளி: 'இங்க நெல்லு மட்டும்தான்' - சுமார் 500 ஏக்கரில் நெல் விவசாயம் செய்யும் ஒரு வித்தியாச கிராமத்தின் கதை
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியகுளம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நெல் விவசாயம் மட்டுமே நடைபெற்று வருகிறது.
பணப்பயிர்களைத் தவிர்க்கும் வகையில் விவசாயிகள் சங்கம் மற்றும் நீதிமன்றத் தடையுத்தரவு மூலம் இந்நிலம் பாதுகாக்கப்படுகிறது.
இப்பகுதிக்கு 'பெரியகுளம்' எனப் பெயர் வரக் காரணம், பெரியகுளத்தின் நீரைப் பெற்று இப்பகுதி வயல்கள் (ஏலா) பாசனம் பெறுவதுதான். இங்கு ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன, அவை இந்த குளத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.
லாபத்தை விட, பாரம்பரியத்தைக் காக்கவும் உணவின் தேவையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் விவசாயிகள் கடுமையாக உழைக்கின்றனர். வங்கி வேலை மற்றும் வெளிநாட்டு வேலையைக் கூட விடுத்து சிலர் முழுநேர விவசாயிகளாக மாறியுள்ளனர்.
இன்றைய இளைஞர்களுக்கு விவசாயத்தில் ஆர்வம் குறைந்துள்ளதும், வேலைவாய்ப்புத் தேடி வெளியூர் செல்வதும் இத்தகைய பாரம்பரிய விவசாய நிலங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
தயாரிப்பு, படப்பிடிப்பு மற்றும் படத்தொகுப்பு - சாம் டேனியல்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



