காணொளி: "நேபாளத்திலிருந்து அடித்து வரப்படும் மீன்களை உண்ண வேண்டாம்" – பிகார் அரசு

காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளத்திலிருந்து அடித்து வரப்படும் மீன்களை உண்ணவேண்டாம் – பிகார் அரசு
காணொளி: "நேபாளத்திலிருந்து அடித்து வரப்படும் மீன்களை உண்ண வேண்டாம்" – பிகார் அரசு
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்திலிருந்து வெள்ளநீருடன் அடித்து வரப்பட்ட மீன்கள் குறித்து பிகார் அரசு திங்களன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அத்தகைய மீன்களை உண்ண வேண்டாம் என்று அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளநீருடன் வரும் இந்த மீன்கள் குறிப்பாக கண்டக் ஆற்றில் காணப்படுகின்றன.

உள்ளூர் ஊடகத் தகவல்களின்படி, கூஞ்ச் கேட்ஃபிஷ், பாகர், கிராஸ் கார்ப் மற்றும் பராலி போன்ற பெரிய ரக மீன்கள் பிகாரில் காணப்படுகின்றன. அத்தகைய மீன்களைக் கண்டால் உள்ளூர் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு