காணொளி: பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொண்ட வன்னி அரசு, உதயநிதி
காணொளி: பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொண்ட வன்னி அரசு, உதயநிதி
பிரசுரிக்கப்பட்டது
சட்டப் பேரவையில் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சமூக நீதி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, தனது வெற்றியைவிட விசிக வேட்பாளர் வன்னி அரசின் வெற்றிதான் முக்கியம் எனத் தேர்தல் பரப்புரையில் தமக்காக பரப்புரை செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
வன்னி அரசின் பேச்சுக்குப் பதிலளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவனை தனது அரசியல் ஆசானாக ஏற்கும் நபர் என்று தன்னைப் பற்றி அவையில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



