செயற்கை நுண்ணறிவு பற்றி எழும் கவலைகள் பற்றி டிரம்ப் கருத்து

காணொளிக் குறிப்பு, ஏஐ குறித்த ஆபத்துகள் மிகைப்படுத்தப்படுகின்றன: டிரம்ப்
செயற்கை நுண்ணறிவு பற்றி எழும் கவலைகள் பற்றி டிரம்ப் கருத்து
பிரசுரிக்கப்பட்டது

செயற்கை நுண்ணறிவு குறித்து பல கவலைக்குரிய அறிக்கைகளை நாம் பார்க்கிறோம். ஏஐ தொழில்துறை தனது வளர்ச்சியைத் தாமதப்படுத்த வேண்டுமா அல்லது அதிகம் கட்டுப்படுத்த வேண்டுமா என்று செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் கேட்கப்பட்டது.

நாங்கள் (அமெரிக்கா) ஏஐ துறையில் சீனாவை விட முன்னிலையில் இருக்கிறோம்.

நாங்கள்தான் உலகிலேயே மிகவும் முன்னேறிய நாடு.

வெளிப்படையாகச் சொன்னால், அது அப்படியே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஏனென்றால், ஏஐ துறையில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்.

நாம் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்கலாம், இதை செய்யலாம், அதை செய்யலாம்.

ஆனால், எதிர்மறையான சக்திகள் பல இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்த விஷயம் தேவையில்லாமல் மிகைப்படுத்தப்படுகிறது.

நடக்க வாய்ப்பில்லாத விஷயங்களை பற்றி பேசுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு