காணொளி: கேரளாவில் கிணற்றில் விழுந்த யானையை வனத்துறை மீட்டது எப்படி?

காணொளிக் குறிப்பு, கேரளாவில் கிணற்றில் விழுந்த யானையை வனத்துறை மீட்டது எப்படி?
காணொளி: கேரளாவில் கிணற்றில் விழுந்த யானையை வனத்துறை மீட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் கூவப்பாறை குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை ஒன்று கிணற்றில் விழுந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மண்ணள்ளும் இயந்திரம் கொண்டு, யானை மேலேறி வருவதற்கு ஏதுவாக சரிவு பாதை ஒன்றை அமைத்து வனத்துறையினர் அதனை மீட்டனர். அதன் பின்னர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றுவிட்டது.

வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிடிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு