காணொளி: லா குவைரா நகரில் இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தையை மீட்ட மீட்புக் குழுவினர்

காணொளிக் குறிப்பு, இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட தருணம்
காணொளி: லா குவைரா நகரில் இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தையை மீட்ட மீட்புக் குழுவினர்
பிரசுரிக்கப்பட்டது

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குப் பிறகு, இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்ட தருணம் இது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், லா குவைரா நகரில் மீட்புக் குழுவினர் குழந்தையை இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வந்து, குழந்தையின் தந்தை எனக் கருதப்படும் ஒருவரிடம் ஒப்படைப்பது பதிவாகியுள்ளது. சிறிது நேரம் கழித்து, குழந்தையின் தாயும் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு