காணொளி: முதுமலை அருகே காரை கவிழ்த்த காட்டு யானை

காணொளி: முதுமலை அருகே காரை கவிழ்த்த காட்டு யானை
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தில், நின்று கொண்டிருந்த காரை காட்டு யானை ஒன்று தலைகீழாக கவிழ்த்த காட்சி இது.

அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த காட்சிகளை பதிவு செய்துள்ளனர்.

காருக்குள் மாம்பழம் இருந்ததால் நீண்ட நேரமாக யானை அதை எடுக்க முயன்றதாகவும், அது கிடைக்காததால் ஆத்திரத்தில் காரை சேதப்படுத்தியதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு