காணொளி: 97 வயதில் கின்னஸ் சாதனை படைத்த பெண்
காணொளி: 97 வயதில் கின்னஸ் சாதனை படைத்த பெண்
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான பெட்டி ப்ரோமேஜ், பக்கவாதம் ஏற்பட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு மற்றொரு விங்வாக்கிங் உலக சாதனையைப் படைத்துள்ளார். பெட்டி தனது சொந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் வயதான பெண் விங்வாக்கர் என்ற சாதனையை இவர் படைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. அது தற்போதும் அவரது பேச்சை பாதித்துள்ளது. ஆனால், அதைத்தவிர தனது உடல்நிலை நன்றாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



