காணொளி: பைக்குடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்
காணொளி: பைக்குடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிப்பேட்டை மண்டலத்தில் உள்ள பதிரா மற்றும் ராமலட்சுமணப்பள்ளி கிராமங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. கனமழையால் மானேரு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
தரைப்பாலம் மீது பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது 2 இளைஞர்களும் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, உள்ளூர் மக்கள் கயிறுகளின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி, அவர்களை பத்திரமாக கரைக்கு மீட்டு வந்தனர்.
இளைஞர்கள் மீட்கப்பட்டது எப்படி, விரிவாக பார்க்கலாம் இந்தக்காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



