காணொளி: இரானிலிருந்து பாகிஸ்தானுக்கு எண்ணெய் எவ்வாறு கடத்தப்படுகிறது?

காணொளிக் குறிப்பு,
காணொளி: இரானிலிருந்து பாகிஸ்தானுக்கு எண்ணெய் எவ்வாறு கடத்தப்படுகிறது?
பிரசுரிக்கப்பட்டது

இரான், பாகிஸ்தான் எல்லையில் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள் எரிபொருளைக் கடத்திச் செல்லத் திரண்டனர். அவர்களில் ஒருவரான மஸார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாகிஸ்தானின் மிக ஆபத்தான பகுதிகளில் ஒன்றான பலுசிஸ்தான் வழியாக எரிபொருளை கடத்திச் செல்கிறார்.

பிரத்யேகமாக பிபிசிக்கு கிடைத்த இந்த வீடியோக்கள், எரிபொருள் எங்கிருந்து வருகிறது என்பதைக் காட்டுகின்றன. இவை கடந்த மாதம் இரானுக்குள் படம் பிடிக்கப்பட்டவை.

பெரும் கன்டெய்னர்களை லாரிகளில் ஏற்றி எல்லை தாண்டி கடத்துகின்றனர். பின்னர் அவை மஸார் போன்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்லப்படுகின்றன.

சுமார் 11 முதல் 20 டாலர் வரையிலான லாபத்திற்காக, ஆயுதமேந்திய குழுக்கள் நிறைந்த பகுதி வழியாகச் செல்லும் ஆபத்தான 12 மணிநேரப் பயணத்தில், ‘மஸார்’ எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருளைக் கொண்டு செல்கிறார்.

பலுசிஸ்தானில் வேறு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு எரிபொருள் கடத்தலையே சார்ந்துள்ளனர்.

ஆண்டுதோறும் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கடத்தப்பட்ட இரானிய எரிபொருள் பலுசிஸ்தானுக்குள் நுழைவதாகச் சில மதிப்பீடுகள் கூறுகின்றன.

கருப்புச் சந்தை சிலருக்கு லாபம் தரக்கூடியது, ஆனால் மஸார் போன்ற, அடிமட்டத்தில் உள்ளவர்களின் நிலை அப்படியல்ல.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு