ஒருவர் மீது காவல்துறை எந்த அளவுக்கு பலத்தைப் பயன்படுத்தலாம்?

காணொளிக் குறிப்பு, காணொளி: ஒருவர் மீது காவல்துறை எந்த அளவு பலத்தைப் பயன்படுத்தலாம்?
ஒருவர் மீது காவல்துறை எந்த அளவுக்கு பலத்தைப் பயன்படுத்தலாம்?
பிரசுரிக்கப்பட்டது

தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது, போக்குவரத்து தடை ஏற்பட்டது. அப்போது, பைக்கில் வந்த இளைஞருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவருக்கும் வாக்குவாதம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அந்த இளைஞரிடம் அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும், அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிவித்துள்ள காவல்துறை, நிலைமை கட்டுக்குள் கொண்டுவர அவர்மீது குறைந்தபட்ச பலபிரயோகம் செய்ததாக தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.

காவலர் அந்த இளைஞரை அறைந்ததும், அந்த இளைஞர் காவலரை அறைந்ததும் விவாதப்பொருளானது.

ஒருவர் மீது காவல்துறையினர் எந்த அளவுக்கு பலத்தைப் பயன்படுத்தலாம்? இதுகுறித்து சட்டத்தில் உள்ள நடைமுறைகள் பற்றி வழக்கறிஞர் திருமூர்த்தி கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு