காணொளி: குப்பைகளில் கொட்டப்படும் மாம்பழங்கள் - காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, மாம்பழத்துக்கு உரிய விலை நிர்ணயிக்கக் கோரும் மா விவசாயிகள்
காணொளி: குப்பைகளில் கொட்டப்படும் மாம்பழங்கள் - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் மாம்பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு அல்போன்சா, பங்கனபள்ளி, இமாம் பசந்த் உள்ளிட்ட உயர் ரக மாம்பழங்களும், கிரேப் செந்தூரம், மல்கோவா போன்ற நாட்டு ரகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

கடந்த ஆண்டு ஒரு கிலோ மாம்பழம் 10 ரூபாய் முதல் 20 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் ஒரு கிலோ மாம்பழமே ஐந்து ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

மூன்று ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் மாம்பழம் சென்னையில் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடும் பாதிப்புக்குள்ளாகிய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த மாம்பழங்களை டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு குப்பைகளில் கொட்டி வருகின்றனர். இந்த நிலைமையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மாம்பழங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு