காணொளி: ஃபெராரியின் முதல் மின்சார கார் ரூ. 382 கோடிக்கு விற்பனை

காணொளி: ஃபெராரியின் முதல் மின்சார கார் ரூ. 382 கோடிக்கு விற்பனை
பிரசுரிக்கப்பட்டது

ஃபெராரியின் முதல் முழு மின்சாரக் காரான 'ஃபெராரி லூச்சே' (Ferrari Luce) ஏலத்தில் சுமார் ரூ.382 கோடி என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் ஆர்எம் சோத்பிஸ் நடத்திய ஏலத்தில், இந்தக் கார் அதன் அசல் விலையை விட 35 மடங்குக்கும் அதிகமான தொகைக்கு விற்பனையானது. ஏலத்தின் மூலம் கிடைக்கும் முழு வருவாயும் ஃபெராரி அறக்கட்டளையின் கல்வித் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என சோத்பிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐபோன் வடிவமைப்பாளர் சர் ஜோனி ஐவ் அளித்த கருத்துகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 'லூஸ்', இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான நாள் முதலே இது குறிப்பிடத்தக்க விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

ஃபெராரியின் பாரம்பரிய வடிவமைப்பு பாணியிலிருந்து இந்தக் கார் முற்றிலும் மாறுபட்டிருப்பதாக சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பேட்டரி மூலம் இயங்கும் தன்மை மற்றும் ஐந்து இருக்கைகள் கொண்ட அமைப்பு ஆகியவற்றால், பிராண்டின் அடையாள சாயலில் ஒரு பகுதியை இது இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு