You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்
காணொளி: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்
பிரசுரிக்கப்பட்டது
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர் இரட்டை சகோதரிகள்.
கரூர் மாவட்டம் கந்தன்விளை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாவனா ஸ்ரீ மற்றும் பவ்யா ஸ்ரீ. இரட்டையர்களான இவர்கள் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த மே 20 அன்று வெளியான பொதுத் தேர்வு முடிவில் இருவரும், 476 என்ற மதிப்பெண் பெற்றுள்ளனர். இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு