You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கர்ப்பப்பையை எடுத்து விடலாம் என தோணும்' - ஆடை தொழிலாளர்களின் மாதவிடாயை பாதிக்கும் வெப்ப அலை
இந்தியா முழுவதும் 4.5 கோடி பேர் ஆடை மற்றும் ஜவுளித் துறையில் பணிபுரிகின்றனர். இதில் 70% பேர் பெண்கள். தமிழ்நாடு ஜவுளித்துறை தரவுகளின்படி, இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஜவுளித் துறையின் மொத்த வேலைவாய்ப்பில் 28 சதவிகிதத்தை தமிழ்நாடு பூர்த்திசெய்கிறது.
மிக அடர்த்தியான தொழிற்சாலை கட்டமைப்புகள் மற்றும் கடுமையான பணி அழுத்தம் ஆகியவற்றால் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாவதாக, ஹீட் வாட்ச் எனும் அரசு-சாரா அமைப்பும் மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது.
பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாடு மற்றும் டெல்லியை சேர்ந்த 115 ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் வெப்ப அலையால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஜவுளித்துறையில் வேலை பார்க்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு