You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி - 'சிவப்பு எறும்பு துவையல்' - பிரபல தெலங்கானா உணவின் பின்னணி என்ன?
தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் வாழும் இந்தப் பழங்குடியினர், சிவப்பு எறும்புகள் மற்றும் அவற்றின் முட்டைகளைப் பயன்படுத்தி இந்தத் துவையலைத் தயாரிக்கின்றனர்.
காட்டில் உள்ள மரக்கிளைகளுக்கு இடையில் இருக்கும் எறும்புகளை கீழே விழச் செய்து, அவற்றைச் சேகரித்து, அம்மியில் அரைத்து இந்தத் துவையலைச் செய்கிறார்கள்.
இந்த எறும்புத் துவையலைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், பருவகால நோய்களைத் தடுக்க உதவும் என்றும் இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த எறும்புத் துவையல் தங்களுக்கு வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல என்றும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரு பாரம்பரிய மரபு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு