காணொளி: 116 வயதில் பாதயாத்திரையாக திருப்பதி படியேறிய மூதாட்டி

காணொளி: 116 வயதில் பாதயாத்திரையாக திருப்பதி படியேறிய மூதாட்டி
பிரசுரிக்கப்பட்டது

116 வயது மூதாட்டி ஒருவர் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பாதை யாத்திரையாக, மலையில் உள்ள படியேறி சென்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அவருக்கு விஐபி தரிசனம் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தேவஸ்தான அதிகாரிகள் அவரை பற்றி விசாரித்ததில், அந்த மூதாட்டியின் பெயர் நவநீதம்மா என்றும் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற தெரியவந்துள்ளது.

மேலும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நவநீதம்மாவின் பாதயாத்திரை குறித்து தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு