You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 3 மாத கைக்குழந்தையுடன் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்வீடன் அமைச்சர்
காலநிலை மாற்றக் கொள்கைகள் குறித்து வியாழக்கிழமை லக்ஸம்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. ஸ்வீடனின் காலநிலைத் துறை அமைச்சர் ரொமினா போர்மொக்தாரி தனது மூன்று மாத குழந்தை ஆடம்-ஐ கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்தார்.
"அமைச்சராகப் பணியாற்றுவதற்கும், குழந்தையை கவனிக்கும் தாயாக இருப்பதற்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு ஒரு உதாரணமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்"
ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் கூட்டத்தில் ஒரு குழந்தை கலந்து கொண்டது தங்களுக்குத் தெரிந்த வரையில் இதுவே முதல் முறை என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மகப்பேறு விடுப்பு முடிந்து அவர் தற்போது பணிக்குத் திரும்பியுள்ளார். ஸ்வீடனில் செப்டம்பரில் நடைபெறவுள்ள தேர்தல் வரை அவரது கணவர் விடுப்பில் இருப்பார் என்றும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக அவரும் லக்ஸம்பர்க்கு-க்கு பயணம் செய்துள்ளார் என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன், உலகிலேயே மிகவும் தாராளமான பெற்றோர் விடுப்புக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு