காணொளி: சூரியனை இதுவரை யாரும் இப்படி பார்த்ததில்லை!
உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கியான இனோயே சோலார் டெலஸ்கோப், சூரியனின் மேற்பரப்பை இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 5ம் தேதி வெளியிடப்பட்ட காணொளியில், சூரியனின் மேற்பரப்பில் சுழன்றோடும் நெருப்புச் சுழல்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.
இந்தச் சுழற்சிகள்தான் சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த வெடிப்புகளுக்கும், விண்வெளி வானிலைக்கும் முக்கிய காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விண்வெளி வானிலை, பூமியில் மின் இணைப்புகள், செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும்.
நேச்சர் இதழில் வெளியான இந்த ஆய்வு, சூரியனின் செயல்பாடுகளை இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்வதற்கும், எதிர்காலத்தில் விண்வெளி வானிலையை முன்கூட்டியே கணிக்கவும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



