You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பார்வையற்ற மகனுக்கு கால்பந்து போட்டி நகர்வை உணர்த்தும் தந்தை
இரானில் வசிக்கும் இந்த தந்தையும் குழந்தையும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வித்தியாசமான முறையில் அனுபவித்து வருகின்றனர். பிறவியிலேயே பார்வையற்ற குழந்தை அலிரேஸாவுக்காக அவரது தந்தை வீட்டில் ஸ்ட்ராக்கள் மற்றும் அட்டையைப் பயன்படுத்தி சிறிய கால்பந்து மைதான அமைப்பை உருவாக்கியுள்ளார். பந்துக்குப் பதிலாக கோலிக்குண்டைப் பயன்படுத்துகிறார்.
கால்பந்து போட்டி நடக்கும் போது, ஆட்டத்தில் என்ன நடக்கிறதோ அதைப் போலவே தனது மகனின் கையை அந்த மைதான அமைப்பில் நகர்த்தி விளையாட்டை உணர வைக்கிறார். கோல் அடிக்கப்படும் தருணத்தில் அலிரேஸா வெளிப்படுத்தும் மகிழ்ச்சியே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு