You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் தீக்கிரையானது எப்படி?
காணொளி: வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் தீக்கிரையானது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
செக் குடியரசில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னாள் பாட்டா ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
கடந்த வியாழக்கிழமை செக் குடியரசின் ஸ்லின் நகரில் உள்ள முன்னாள் பாட்டா ஷூ தொழிற்சாலையில் தீ பிடித்தது. இந்த கட்டடத்தை வாஸ்கி நிறுவனம் ஷூ சேமிப்பு கிடங்காக பயன்படுத்தி வந்தது.
அதில் சுமார் 70,000 ஜோடி ஷூக்கள் இருந்ததாக வாஸ்கி நிறுவனம் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது. கட்டடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு