You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'கால்பந்து இல்லையென்றால் குழந்தை தொழிலாளியாக இருந்திருப்பேன்'
தனித்துவமான கலாசாரம், உழைக்கும் மக்கள், விளையாட்டின் மீதான பெரும் ஆர்வம், சமூக மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் என வடசென்னைக்கு பல வண்ணங்கள் உள்ளன. அப்படியான வடசென்னையின் வியாசர்பாடியில், கால்பந்து பல பெண் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றி வருகிறது.
வியாசர்பாடியின் முல்லை நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் SC-STEDS எனும் அமைப்பு, சுற்றுப்பகுதிகளில் சமூக-பொருளாதார ரீதியாக விளிம்புநிலையில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கால்பந்து விளையாட்டை பயிற்றுவித்து, அதன் மூலம் அவர்களை கல்வியை நோக்கி நகர்த்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக, பெண் குழந்தைகள் மத்தியில் கல்வி இடைநிற்றல், குழந்தை தொழிலாளர்களாக மாறுதல், சிறுவயதிலேயே திருமணம் ஆகியவற்றை தடுத்து அவர்களை கல்வி பாதைக்கு அழைத்துச் செல்கிறது கால்பந்து.
தயாரிப்பு: நந்தினி வெள்ளைச்சாமி
ஒளிப்பதிவு&படத்தொகுப்பு: சாம் டேனியல்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு