காணொளி: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எரிபொருள் விலை குறையாதது ஏன்?

காணொளி: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எரிபொருள் விலை குறையாதது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

ஜூன் 17 அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. வரும் நாட்களில் இதன் விலை மேலும் குறையும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இவ்வளவு கடுமையான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இரான் போரின் போது, எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 120 டாலர் வரை உயர்ந்திருந்தன.

வியாழக்கிழமை அன்று சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கான முக்கிய குறியீடாக கருதப்படும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்காலிகமாக ஒரு பேரலுக்கு 72.48 அமெரிக்க டாலருக்கும் கீழ் சரிந்தது.

எகனாமிக் டைம்ஸ் செய்தியின் படி, பொதுத்துறை நிறுவனங்கள் மூன்றும் தற்போது பெட்ரோல் விற்பனையில் நல்ல லாபத்தை ஈட்டி வருவதாகவும், டீசல் விற்பனையில் இன்னும் கூட சிறிய அளவில் நஷ்டம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமீபத்திய கச்சா எண்ணெய் விலை சரிவின் பலன்கள் நுகர்வோரைச் சென்றடைய இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக எகனாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு