You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்கா என்ற தனி நாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது எப்படி?
அமெரிக்கா எப்படி ஒரு நாடாக மாறியது என்ற கதை ஸ்பெயினில் 1492இல் இருந்து தொடங்குகிறது. ஸ்பெயினுக்கு ஆசியாவில் இருந்து வர்த்தகப் பொருட்களை மிகவும் பாதுகாப்பாகக் கொண்டு வர புதிய கடல்வழி தேவைப்பட்டது. அதற்காக, ஐரோப்பாவில் இருந்து மேற்குத் திசை நோக்கிப் பயணம் செய்து, உலகைச் சுற்றி ஆசியாவை அடையலாம் என்று கிறிஸ்டோபர் கொலம்பஸ் முன்வந்தார்.
அந்தக் காலத்தில் ஸ்பெயின், மக்கள் எதிர்பார்த்த வர்த்தகப் பொருட்கள் மட்டுமின்றி, ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளியையும் கொண்டு வந்தது. இதனால், இங்கிலாந்தின் போட்டி நாடான ஸ்பெயின் செல்வச் செழிப்பிலும் அதிகாரத்திலும் வேகமாக உயர்ந்தது. அதைத் தாமும் பெற வேண்டுமென இங்கிலாந்தை ஆண்டவர்கள் விரும்பினர்.
தெற்குப் பகுதியில் ஸ்பெயின் மேலும் கவனம் செலுத்த, மற்ற ஐரோப்பிய நாடுகளின் கவனம் வடக்கு நோக்கித் திரும்பியது. 1585இல் பிரிட்டிஷ் அங்கு ஒரு காலனியை அமைக்க முயன்று தோல்வியடைந்தது. ஆனால், 1607இல் மீண்டும் முயன்றது. அவர்கள் முதல் நிரந்தர குடியேற்றத்தை நிறுவி, அதற்கு ஜேம்ஸ்டவுன் எனப் பெயரிட்டனர். அந்தப் பகுதிக்கு வெர்ஜீனியா என்று பெயர் சூட்டினர். இப்படித்தான் அமெரிக்கா என்ற நாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு