You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பழைய வைனைல் ரெக்கார்டுகளில் இசையை ரசிக்கும் மக்கள்
தனிமை என்பது யாரும் தப்பிக்க முடியாத ஒன்று. அதை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம், இல்லையா? நம்மில் பெரும்பாலோனோர் தனிமையுடன் ஒன்றிப்போக முயற்சிக்கும் ஒரு வழி இசை மற்றும் கலை.
அனைவரும் ஏதோ ஓர் ஓட்டத்தில் இருக்கிறார்கள். இது தான் உலகின் முடிவு, உலகம் எனக்கு எதிராக இருக்கிறது என்று உணர்கிறார்கள். ஆனால், இந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது பல சவால்களை கடக்க அவர்களுக்கு உதவியிருக்கிறது.
நாம் அனைத்துமே உடனடியாகக் கிடைக்கும் ஒரு யுகத்தில் வாழ்கிறோம். ஒரு பட்டனை அழுத்தினால் உணவு, ஒரு tap செய்தால் இசை… இந்த டிஜிட்டல் வேகத்தில், மக்கள் முன்பை விட அதிகமாக ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் முன்பை விட அதிகம் தனிமையாகவும் உணர்கிறார்கள்.
உலகம் ரீல்ஸ்களின் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், சிலர் இந்த பழைய வைனைல் ரெக்கார்டுகளில் இளைப்பாறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு