You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹோர்மூஸ் நீரிணையில் பிபிசி செய்தியாளர் - கள நிலவரம் என்ன?
அமெரிக்கா, இரான் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போரில் இரானின் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதமாக ஹோர்மூஸ் நீரிணை கருதப்படுகிறது.
போர் தொடங்கியதுமே இந்த நீரிணையை இரான் கட்டுப்படுத்த தொடங்கியது. தற்போது போர் நிறுத்தம் எட்டப்பட்டு இருந்தாலும், இரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்தச் சூழலில், பிபிசி உலக சேவையின் மூத்த சர்வதேச புலனாய்வு செய்தியாளர் நவல் அல்-மகாஃபி, தெற்கு இரானிய துறைமுகமான பந்தர் அப்பாஸுக்கு பயணம் செய்துள்ளார். ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து நேரடியாக செய்தி வழங்கும் முதல் சர்வதேச ஊடகம் பிபிசியே.
பிபிசி பாரசீக சேவையில் இந்த செய்தியை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், பந்தர் அப்பாஸில் இருந்து பிபிசி இந்த செய்தியை வழங்குகிறது. இந்தக் கட்டுப்பாடு இரானில் செயல்படும் அனைத்து சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு