You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கிணற்றுக்குள் இறங்கி நல்ல பாம்பை மீட்ட வனத்துறை அதிகாரி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுக பெருமாள். தனது கிணற்றுக்குள் இருந்த மோட்டார் பழுதாகி இருந்ததால், அதனை சரிசெய்வதற்காக, கயிறு மூலம் சுமார் 35 அடி ஆழத்தில் மோட்டார் இருந்த பகுதிக்கு ஆறுமுக பெருமாள் இறங்கியுள்ளார்.
அப்போது, மோட்டார் அருகே இருந்த நல்ல பாம்பு ஒன்று அவரைப் பார்த்து சீறியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கிணற்றில் இருந்து மேலே வந்து, ஆலங்குளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையைச் சேர்ந்த அம்பலவாணன் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பாம்பை மீட்டார். பின்னர், ஆலங்குளம் ராமர் கோவில் வனப்பகுதியில் பாம்பு பாதுகாப்பாக விடப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு