சட்டப்பேரவையில் கொந்தளித்த பழனிசாமி, கோபப்பட்ட ஜேசிடி பிரபாகர்

சட்டப்பேரவையில் கொந்தளித்த பழனிசாமி, கோபப்பட்ட ஜேசிடி பிரபாகர்
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே மிகக் கடுமையான விவாதமும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது காலியாக உள்ள 6 தொகுதி மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டபோது அமைச்சர் செங்கோட்டையன் இடைத் தேர்தல் விரைவில் நடைபெறும் எனவும் தவெக அதில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய செங்கோட்டையன் எடப்பாடி தொகுதியில் நடந்தது குதிரைபேரம் இல்லையா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் வாங்கப்படவில்லை என்றும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இந்த விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர்கள் நின்றுகொண்டிருந்ததை கண்டித்த அவைத்தலைவர் சட்டப்பேரவையில் பொதுக்கூட்டமா நடத்துகிறோம் என கேள்வி எழுப்பினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு