You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மாப்பிள்ளை - மருமகன்': பேரவையில் திமுக - தவெக வார்த்தைப் போர்
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திமுக மற்றும் ஆளும் தவெக இடையே "மாப்பிள்ளை - மருமகன்" என தனிநபர் விமர்சனங்களுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் முன்னேற்றம் இல்லாததைச் சுட்டிக்காட்டிய தவெக சட்டத்துறை அமைச்சர் சி. டி. நிர்மல் குமார், முந்தைய ஆட்சியில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் நலனுக்காகவே இதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது எனக் கூறி, "ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை"க்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதா என மறைமுகமாக விமர்சித்தார்.
இதற்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்த திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, முதலீடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, தற்போது எந்த "லாட்டரி மருமகனுக்காக" புதிய விமான நிலையத்தை அமைக்கப் போகிறீர்கள் என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு