You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தமிழ்நாடு அரசு தலையிட வேண்டாம்' - கர்நாடக முதல்வர் பேசியது என்ன?
கர்நாடகா வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கர்நாடக நிர்வாகத்தில் தலையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி அமைப்பில் ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் தான் தலையிட முடியாது என குறிப்பிட்ட அவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் சொந்த பிரச்சனைகள் இருக்கின்றன என கூறினார்.
தங்கள் மாநிலத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது தங்களுக்கு தெரியும் என்பதை தமிழ்நாடு புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்த சிவக்குமார், அவர்கள் அவர்களுடைய வேலையைச் செய்யட்டும், நாங்கள் எங்களுடைய வேலையைச் செய்வோம் என கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு