You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காமனெயி உடல் இராக் செல்வது ஏன்?
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவர் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இரான் தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, ஜூலை 3 முதல் ஜூலை 9 வரை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்கிடையே காமனெயியின் உடல் இராக்குக்கும் கொண்டு செல்லப்பட உள்ளது. இவ்வளவு நாள் அவர் உடலை இரான் பாதுகாத்தது எப்படி? இராக்குக்கு அவர் உடல் கொண்டு செல்லப்படுவது ஏன்? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு