காணொளி: புனேவில் சாலை பிளந்து பீறிட்டு வெளியேறிய நீர்

காணொளி: புனேவில் சாலை பிளந்து பீறிட்டு வெளியேறிய நீர்
பிரசுரிக்கப்பட்டது

புனேவின் தலேகான் - தபாடே பகுதியில் புதிய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றபோது பதிவான காட்சிகள் இவை. இச்சோதனையின்போது குழாய் ஒன்று வெடித்ததால், சாலை மேற்பரப்பை உடைத்துக்கொண்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் இச்சாலையின் அடியில் புதிய குழாய் பதிக்கப்பட்டு, அதன் மேல் தார் சாலை அமைக்கப்பட்டது. அடுத்த வாரம் இக்குடிநீர் விநியோகத் திட்டம் தொடங்கி வைக்கப்படவிருந்தது.

அதற்கு முன்னதாக, சோதனை செய்வதற்காக நகராட்சி நிர்வாகம் புதிய தொட்டியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டது. தண்ணீர் திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குழாய் வெடித்தது.

இதனால் தார் சாலையை உடைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேறியது. அச்சமயத்தில் சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஒப்பந்ததாரர் குழாயைப் சரியாகப் பொருத்தாததே இச்சம்பவத்திற்குக் காரணம் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குழாய் மற்றும் சாலையை சரிசெய்வதற்கான செலவுத் தொகை ஒப்பந்ததாரரிடமிருந்தே வசூலிக்கப்படும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு