You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மத்திய பிரதேசத்தில் டெலிவரி ஊழியரை தாக்கிய சிறுத்தை
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர்-ல், டெலிவரி ஊழியர் ஒருவரை சிறுத்தை தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதில் அந்த உணவு டெலிவரி ஊழியர் உயிர் தப்பினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, இதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் குளியலறைக்குள் சிறுத்தை புகுந்த காணொளியும் வெளியானது.
உண்மையில், இந்தோர்-ல் ஆக்ரா-மும்பை புறவழிச்சாலையை ஒட்டி பல குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
இவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குடேல் மற்றும் ராலாமண்டல் மலை வனப்பகுதிகளை ஒட்டியுள்ளன. இப்பகுதியில் பெய்த கன மழை காரணமாகவே, சிறுத்தை காட்டுப் பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுத்தையைத் தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகிறது,இதுவரை அதன் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று இந்தோர் வனத்துறை அதிகாரி லால் சுதாகர் சிங் கூறுகிறார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு