You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பருவகாலத்தில் பூக்கும் மகாராஷ்டிராவின் அரிய வகை பூக்கள்
முதல் பார்வையில் வெறிச்சோடியதாகத் தோன்றும் இந்த இடம், மழை வந்ததும் முற்றிலும் மாறிவிடுகிறது. ராஜாபூர் அருகே தேவாச்சே கோத்தானே கிராமத்தில், சிறிய வெள்ளைப் பூக்கள் பீடபூமியைப் போர்வை போல மூடுகின்றன.
பார்சு சுத்திகரிப்பு ஆலை சர்ச்சையால் கவனத்திற்கு வந்த இந்தப் பகுதியில்தான், ஒருகாலத்தில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட டிப்காடி கொங்கனென்சிஸ் பூக்கிறது.
உள்ளூரில் ஏக்தண்டி, கௌரியின் பூ உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படும் இவை பருவகாலத்தில் மலர்கின்றன. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அவற்றைப் பறித்து, தொடுத்து தலைமுடியில் அணிகின்றனர்.
இந்தப் பீடபூமியில் காணப்படும் அரிய தாவரம் தீப்காடி மட்டுமல்ல. உள்ளூரில் கப்ரி கமல் என்று அழைக்கப்படும் மற்றொரு தாவரமும் இங்கு பூக்கிறது.
மழைக்காலத்தின் சில மாதங்களில் மட்டுமே வெளிப்படும் இந்தத் தாவரங்கள், பூச்சிகளுக்கும் முக்கிய வாழிடமாக உள்ளன.
அரிய தாவரங்களையும் உயிரினங்களையும் தாங்கி நிற்கும் இந்த லேட்டரைட் பீடபூமிகளைப் பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் உள்ளூர் மக்களும் வலியுறுத்துகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு