காணொளி: சீனாவில் தனிமை போக்கும் மருந்தாக புதிய 'ரோபோ'

காணொளி: சீனாவில் தனிமை போக்கும் மருந்தாக புதிய 'ரோபோ'
பிரசுரிக்கப்பட்டது

இந்த ரோபோக்கள் சீனாவில் தனிமை போக்கும் மருந்தாக விற்பனை செய்யப்படுகின்றன. முன்பதிவின்படி விற்பனையாகும் இவை, ஏஐ வழி உரையாடல்களை நிகழ்த்துகின்றன. துணை இல்லாதவர்கள் மற்றும் முதியவர்களுக்கு சிறந்த துணையாக இருக்கும் என அவை விளம்பரப்படுத்தப்படுகின்றன.

பெருமளவில் உற்பத்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் அதி-யதார்த்த ஹியூமனாய்ட் ரோபோ என இவை பரவலாக புகழப்படுகின்றன. இதன் விலை, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 17 லட்சம் முதல் ரூ.1 கோடியே 40 லட்சம் வரையாகும்.

ஆனால், பயனர்களின் தரவு தனியுரிமை குறித்தும், இயந்திரங்களுடன் அதிகப்படியான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதால் ஏற்படும் மனநல அபாயங்கள் குறித்தும் கவலைகள் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு