You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: விமர்சனத்துக்கு உள்ளான அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு
விமர்சனத்துக்கு உள்ளான அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு
கடந்த ஜூலை 2 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்விச் சூழல், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆய்வின்போது மாணவி ஒருவரிடம் அவர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியவிதம் மற்றும் அவர் ஆசிரியரிடம் பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அமைச்சரின் பேச்சை தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
விசிக தலைவர் திருமாவளவனும் இச்சம்பவம் குறித்து பேசினார்.
அரசுப் பள்ளி ஆய்வு ஏற்படுத்திய சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், 'அரசுப் பள்ளி மாணவியை கேலி செய்ததாக பொய்யான கதையைப் பரப்புகிறார்கள். நானே ஓர் அரசுப் பள்ளி மாணவி. தமிழ் வழிக்கல்வியில் படித்தேன்' என தெரிவித்துள்ளார்.
தேவையற்ற முறையில் ஆய்வுகள் செய்ய வேண்டாம் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என ஆய்வு குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு