காணொளி: சமோசா வாங்குவதற்காக ரயிலை நிறுத்தினாரா ஓட்டுநர்? - வைரல் காணொளியின் உண்மை நிலை என்ன?

காணொளி: சமோசா வாங்குவதற்காக ரயிலை நிறுத்தினாரா ஓட்டுநர்? - வைரல் காணொளியின் உண்மை நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சமோசா வாங்குவதற்காக நடுவழியில் ரயிலை அதன் ஓட்டுநர் நிறுத்தியதாக காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

மத்திய பிரதேசத்தின் இந்தோர் மற்றும் மோ நகருக்கு இடையே, ரயிலை நிறுத்தி, அதன் ஓட்டுநர் அருகில் இருந்த கடையில் சமோசாகளை வாங்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வந்தது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மேற்கு ரயில்வே , இந்த காணொளி தவறாக சித்தரிக்கப்பட்டு பகிரப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த ரயில் பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்தது என்றும், அது உணவு வாங்குவதற்காக நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு