காணொளி: அமெரிக்கா - இரான் இடையே மோதல் தொடங்கியது, வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்

காணொளி: அமெரிக்கா - இரான் இடையே மோதல் தொடங்கியது, வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்
பிரசுரிக்கப்பட்டது

ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக இரான் மீது கடுமையான தாக்குதல்களை தொடங்கியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இரானின் இஸ்லாமிய புரட்சிப் படையின் 60 சிறிய படகுகள் உட்பட 80 இலக்குகளை தாக்கியதாக அமெரிக்கா கூறுகிறது.

மறுபுறம் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை இரான் குறிவைத்துள்ளது.

கடந்த திங்களன்று ஹோர்மூஸ் வழியாக சென்றுக்கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பலின் இயந்திர அறையை அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதால் தீப்பிடித்ததாக, பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டு தனித்தனி சம்பவங்களில், நீரிணையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டாலும், அது தனது அடுத்த துறைமுகத்தை நோக்கி பயணத்தைத் தொடர முடிந்ததாகவும், மற்றொரு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டதில் அதன் கட்டமைப்பில் லேசான சேதம் ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

எனினும், எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு இரான் இதுவரை நேரடியாக பொறுப்பேற்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு