You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கனமழையில் மின் கம்பத்தில் ஏறி சீரமைத்த ஊழியர்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகிலுள்ள ராய்கட் மாவட்டம், கர்ஜத் பகுதியில் உள்ள டோங்கர்படாவைச் சேர்ந்த சந்தோஷ் கரதுலே, வெள்ள நீரில் இறங்கி அப்பகுதியில் மின்சார விநியோகத்தைச் சீரமைத்தார். கர்ஜத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று நாட்களாக மிகக் கனமழை பெய்தது. உல்ஹாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பலத்த காற்றினால் மின் கம்பிகளும் சேதமடைந்தன.
இதன் விளைவாக, நகரின் பல பகுதிகளில் பல மணிநேரங்களுக்கு மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. இது குறித்து மகாராஷ்டிர மின்சார விநியோக நிறுவனம் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு