You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய பூனைகள், நாய்கள் மீட்பு
வெள்ளத்தில் சிக்கிய பூனைகள், நாய்களை விலங்குகள் காப்பக உரிமையாளர் மீட்கும் காட்சி இது.
அவரால் ஒரே நேரத்தில் இரண்டு நாய்களை வெளியேற்ற முடிந்தது. அதேநேரம் பூனைகள், காப்பகத்தின் சுவர்கள் மற்றும் கூரையின் மீது காத்திருந்தன.
மீட்கப்பட்ட விலங்குகள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக பணியாளர் ஒருவர் கூறினார். இருப்பினும், பல நாய்களும், 50 பூனைகளும் இன்னும் மீட்புக்காக காத்திருக்கின்றன.
தென் சீனாவின் குவாங்சி பகுதி கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேசக் புயலால் பெய்த வரலாறு காணாத மழையே இதற்குக் காரணம். இதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு