காணொளி: ஸப்போரிஷியா நகரில் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த நீச்சல் குளம்

காணொளி: ஸப்போரிஷியா நகரில் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த நீச்சல் குளம்
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனின் ஸப்போரிஷியா நகரில், ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் நீச்சல் குளம் ஒன்று பாதிப்புக்கு உள்ளானதை காட்டும் காட்சி இது.

அங்கு மக்கள் நீந்திக் கொண்டிருந்தபோதே, இந்த தாக்குதல் நடந்தது.

ஸப்போரிஷியா முழுவதும் நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் நீச்சல் குளத்தில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு