You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நிலம் விற்று கிடைத்த ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த முதியவர் - ஓராண்டுக்கு பின் நேர்ந்தது என்ன?
கிழிந்து சிதைந்த நிலையில் உள்ள ஏராளமான 500 ரூபாய் நோட்டுகளுடன் ஒரு முதியவரும் பெண்ணும் இருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தக் காணொளியில் இருப்பவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த 60 வயதான மங்கிலால் மேக்வால் மற்றும் அவரின் மனைவி சைலி தேவி.
சுமார் ஓராண்டுக்கு முன்பு, கான்கிரீட் வீடு கட்டுவதற்காக மங்கிலால் மேக்வால் தனது நிலம் ஒன்றை ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றார். மழைநீரில் பணம் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு பையில் பணத்தை வைத்து அதைத் தனது வயலில் புதைத்து வைத்தார்.
ஆனால், மறுநாள் காலை பணத்தைத் தேட அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது, ஓராண்டுக்குப் பிறகு, வயலை உழுவதற்காக டிராக்டர் பயன்படுத்தப்பட்டபோது மங்கிலால் புதைத்து வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றன. ஆனால், அவை கரையான் அரித்து சேதமடைந்திருந்தன.
தற்போது மங்கிலாலும் அவரது குடும்பத்தினரும் தங்கள் கடைசி நம்பிக்கையாக வங்கியை நாடியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு